திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதில் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பழவேற்காடு கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

எனது இந்தியா எனது வாக்கு, எனது உரிமை எனது வாக்கு,அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்னும் பிரச்சாரங்களை மையப்படுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் துவக்கி வைத்தார்.

ஸ்வீப் எனப்படும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மனித சங்கிலியும்,கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயக்குமார்,

பொன்னேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், பொன்னேரி காவல் உதவி ஆணையர் ராஜசேகர், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், மணிசேகர், திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் சாய் கணேஷ்,

தமிழ்நாடு கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் சபாபதி, ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட ஊராட்சி செயலர்கள் அரசு துறையை சார்ந்த பல்வேறு அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed