இந்தியா மற்றும் உலக நாடுகளின் தற்போதைய சூழ்நிலைகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்…
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று சதுக்கம் திறப்பு விழாவும், இந்தியா மற்றும் உலக நாடுகளின் தற்போதைய சூழ்நிலைகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கமும் நடைபெற்றது.

டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில பல்கலைக்கழகங்கள், சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வரலாற்று பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
உநா அரசு கல்லூரியின் கல்லூரி முதல்வர் முனைவர் தில்லைநாயகி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தினை, மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும் விவேகானந்தா பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தருமான முனைவர் மணி குமார் மாநாட்டை துவக்கி வைத்தார்.

வரலாற்று சதுக்கத்தினை அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் சாலமன் செல்வம் மற்றும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சுஷாந்த் குமார் பேக் மற்றும் அலகாபாத் ஜிஎஸ்டி கமிஷனர் ராஜூ சக்திவேல் ஐ.ஆர்.எஸ் ஆகியோர் திறந்து வைத்து கருத்துரை ஆற்றினர்.
அமெரிக்க வரலாற்று பேராசிரியர் சாலமன் செல்வம் பேசும்போது,
வரலாறு குறித்த அகில உலக கருத்தரங்கம் நடைபெறுவது பெருமை பட வேண்டிய விஷயம் எனவும், பன்னாட்டு வரலாற்றை கற்றுக் கொள்வது இன்றைய தலைமுறையினரின் கடமை எனவும் நம் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் வரலாறு இன்றியமையாதது எனவும் தெரிவித்தார். இந்திய, தமிழக பல்கலைக்கழகங்களின் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

வரலாற்று துறை தலைவர், மாறவர்மன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777
