திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள, ஸ்ரீதேவி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட்ஸ் பார் அசோசியேஷன் நடத்திய வழக்கறிஞர்கள் மட்டும் பங்கேற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில், சென்னை, திருவள்ளூர், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்களின் கிரிக்கெட் அணிகள் இதில் பங்கேற்றன.

பொன்னேரி கிரிமினல் அட்வகேட்ஸ் பார் அசோசியேஷன்
சங்க தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன், ராதா மணாளன், சங்க ஒருங்கிணைப்பாளர் காந்தி, சங்க செயலாளர் வழக்கறிஞர் விஜய், பொருளாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கலந்துகொண்டு போட்டியினை துவக்கி வைத்தார்.
அவருக்கு சங்கத்தின் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், ஆட்டம் நடக்கும் மேடையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 30,000, 2 வது பரிசு 20,000, 3 வது பரிசு 10,000, 4 வது பரிசு 5000 தொகையும், பதக்கங்களும், ஆளுயர கோப்பைகளும் வழங்கப்பட்டது. சிறப்பாக பந்து வீசிய, பேட்டிங் செய்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டு துறை செயலாளர்கள் வழக்கறிஞர்கள் திருக்குமரன், ஞானசேகரன் ஆகியோர் கிரிக்கெட் போட்டியினை முன்னின்று நடத்தினர்.

போட்டியில் கோப்பையை பொன்னேரி சாம் வழக்கறிஞர் அணி தட்டிச் சென்றது. இதற்கான கோப்பையையும் 30 ஆயிரம் பரிசுத்தொகையையும் பொன்னேரி காவல் ஆய்வாளர் தமிழன்பன் வழங்கினார்.
சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் காரணி எம்.மெர்லின், வீரா, மூத்த வழக்கறிஞர்கள் அமரத்காந்தி, மாலதி, பொன்னேரி ஆகியோர் பதக்கம் அணிவித்தனர்.

மூத்த வழக்கறிஞர்கள் துளசிராமன், கோபி ஆகியோர் வர்ணனை செய்தனர். கிரிமினல் அட்வகேட்ஸ் பார் அசோசியேசன் துணை தலைவர்கள் சக்கரபாணி, சி.எம்.சைமன், துணை செயலாளர்கள் கார்த்திக், ஆர்மி வெற்றி, வழக்கறிஞர் பூதூர் சீனிவாசன், பிரவீன் குமார், நூலகர் விக்னேஷ், துணை செயலாளர்கள் பிரகாஷ்,பிரபு இணை செயலாளர்கள் சூர்யா,முத்துராமன், சீனியுவராஜ், சுரேஷ், கந்தவேல், லெனின் மற்றும் கோகுல், ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed