கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 20. இலட்சத்து 15796 ஆயிரம் வாக்காளர்கள்
இடம் பெற்றுள்ளனர் – வரைவுப்
பட்டியலை விட தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் கூடுதலாக 69,037 வாக்காளர்கள் சேர்க்கப்
பட்டுள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்து, இன்று (23.02.2026) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் புள்ளிவிவரங்கள்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய இந்த இறுதிப் பட்டியலில் மொத்தம் 20, இலட்சத்து 15, ஆயிரத்து 796 பேர் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி ஆண்கள்: 9,91,527,
பெண்கள்: 10,23,976
மூன்றாம் பாலினத்தவர்: 293
திருத்தப் பணிகள் விவரம்:
கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 19,46,759 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு நடைபெற்ற ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல் காலத்தில், பெயர் சேர்த்தலுக்காக (படிவம் 6) பெறப்பட்ட 78,682 விண்ணப்பங்களில் 77,713 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேபோல், பெயர் நீக்கம் மற்றும் திருத்தங்களுக்காக (படிவம் 7) பெறப்பட்ட 8,708 விண்ணப்பங்களில் 8,676 விண்ணப்பங்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டு இந்த இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

தொகுதி வாரியான வாக்காளர்கள் எண்ணிக்கை:
திட்டக்குடி (தனி): 2,06,770
விருத்தாசலம்: 2,37,836
நெய்வேலி: 1,89,024
பண்ருட்டி: 2,40,048
கடலூர்: 2,21,152
குறிஞ்சிப்பாடி: 2,36,297
புவனகிரி: 2,30,968
சிதம்பரம்: 2,29,136
காட்டுமன்னார்கோயில் (தனி): 2,24,565
வரைவுப் பட்டியலை விட தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் கூடுதலாக 69,037 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரொலி / 8939476777
