செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப் பட்டினம் மெய்யூர் பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பெத்தேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பொம்மலாட்டம் நிகழ்ச்சி 20 ஆம் தேதி நடைபெற்றது பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் கணேசன் அறிவுரையின் படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஹேமலதா தலைமை தாங்கினார்.

இதில் கூவத்தூர் தமிழன்னை கலைக் குழு நிறுவுநரும் பொம்மலாட்டக் கலைஞருமான அகநம்பி தி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கையுறை பொம்மை மற்றும் கம்பி பொம்மைகளை கொண்டு குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார் இதில் ஆசிரியர்கள் மாணவர்கள பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் : பாலசுப்பிரமணி எதிரொலி . இன் / 8939476777
