கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சொந்தம்பட்டி கிராமம் சேர்ந்தவர் முனியப்பா கவுண்டர் இவரது மனைவி முனியம்மா வயசு 75. இவர்களுக்கு மாதம்மாள், ராஜேஸ்வரி, மலர், சகுந்தலா, தங்கமணி என 5 பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் கணவர் முனியப்பா கவுண்டர் இறந்துவிட்ட நிலையில் முனியம்மா தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் மாதம்மாள் மற்றும் அவரது சகோதரி மலர் ஆகிய இருவரும் தாய் முனியம்மாவிடம் உன்னை நாங்கள் நலமாக பார்த்துக்கொள்ளுவோம் என ஆசை வார்த்தைகள் கூறி இருவரும் முனியம்ளிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தையும் உயில் எழுதி வாங்கி உள்ளனர். பின்னர் காலப்போக்கில் தனது தாய் என்றும் பாராமல் முனியம்மாளுக்கு தேவையான உணவு, உடை ஏதும் கொடுக்காமல் அடித்து விட்டி உள்ள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட முனியம்மா தமிழக விவசாயிகள் சங்கத்தினரின் உதவிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தன்னுடைய மகள்கள் நிலம் முழுவதையும் அபகரித்து உள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார்.

பின்னர் இது குறித்து பேசிய ராம கவுண்டர்…

75 வயதான முனியம்மாளுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை முனியம்மாளின் மகள்கள் அபகரித்து உள்ளதோடு முனியம்மாளை கவனிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட முனியம்மா மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தன்னிடம் இருந்து அபகரித்த நிலத்தை மீட்டுத்தர வேண்டி புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் வருவாய் வட்டாச்சியர் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக இராம கவுண்டர் தெரிவித்தார்.

பெற்ற தாயிடம் இருந்து நிலத்தை அபகரித்து விட்டு அவரை கவனிக்காமல் விரட்டிய சம்பவம் போச்சம்பள்ளியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8949476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed