திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த கூனங் குப்பம் மீனவ கிராமத்தில் வசிப்பவர் தங்கதுரை. தனது மனைவி தேசம் என்பருடன் வசித்து வரும் இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அவருடைய வீட்டில் திடீரென தீ பற்றி தீ மள மளவென வீடு முழுவதும் பரவி உள்ளது. இதனால் செய்வதறியாது கணவன் மனைவி இருவரும் தீயிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தீக்காயங்கள் ஏற்பட்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்குள் தீ வேகமாக பரவியதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இருந்து நாசமானது சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

காயமடைந்த தம்பிதுரை தேசம் ஆகிய இருவரையும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையில் புகார் அளித்ததின் aபேரில் திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

