திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுகா, வரதராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரி முந்தைய காலங்களில் சுமார் 130 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவுடன் இருந்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால், அது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடியிருப்புகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என அனைத்து வகையிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது 50 ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது.


முந்தைய காலகட்டத்தில் இந்த ஏரியிலிருந்து அதன் சுற்றுவட்டார பகுதிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசன வசதி கொடுக்கக்கூடிய ஏரியாக, இந்த வரதராஜபுரம் ஏரி இருந்து உள்ளது. ஆனால், இந்த ஏரியை சுற்றியும் தற்போது இரவு நேரங்களில் பலர் மருத்துவமனை கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள், தனியார் கூடவுனில் வரகூடிய கழிவுகள் என பல விதங்களில் இந்த ஏரியை சுற்றி கொட்டப்படு வருகிறது.


மேலும், இந்த ஏரியை சுற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த விதத்திலும் பராமரிக்காமலும், பாதுகாக்காமலும் விட்டதினால், இந்த ஏரி முழுவதும் ஆக்கிரமிப்பு மட்டுமில்லாமல் ஆகாயத்தாமரைகள் ஏரிகள் முழுவதும் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இப்படி இந்த ஏரி தற்போது சிறிதும் சுகாதாரம் இல்லாத சூழலில் இருப்பதால், இந்த ஏரியில் மழை காலங்களில் தேக்கக்கூடிய மழை நீர் கூட நச்சு தன்மையுடன் மாறிவிடுகிறது.

அதனால், இந்த ஏரியை சுற்றியுள்ள விளைநிலங்களுக்கு பாசன வசதி கொடுத்த இந்த ஏரி, தற்போது இந்த ஏரியை சுற்றி உள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீரை கெட்டுப் போக செய்து, மக்கள் பயன்படுத்த கூட மு டியாத அளவிற்கு மாறிவிட்டது . இதற்குப் பிறகாவது பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த ஏரியை பராமரித்து எதிர்காலத்தில் இந்த ஏரியை சுற்றி இருக்கக்கூடிய மக்களுக்கு குடிநீர் தேவைக்காக மழைநீர் சேகரிப்பாகவும் பயன்படுத்தி இப்பகுதி நிலத்தடி நீரை காப்பாற்ற வேண்டும் என பூந்தமல்லி சுற்றுவட்டார மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தகவல் : கோதை, ஜெயராமான் / பூந்தமால்லி / எதிரொலி / 8939476777
