சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் தென்னிந்திய அளவில் இயற்கை வேளாண்மை மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக மாவட்ட தோறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் உள்ள குந்தாரப்பள்ளியில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு குறித்த 7-வதுஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் முனைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் தலைவர் பி ஆர் பாண்டியன், தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விலை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் இதுபோன்ற அவலங்களை போக்க வேண்டுமென்றால் ரசாயன பயன்பாடுகளை தவிர்த்து இயற்கையான முறையில் விளைப்பொருள்களை உற்பத்தி செய்து அதற்கான விலையை நாமே விலை நிர்ணையம் செய்ய அனைவரும் ஒன்று திரண்டு இயற்கை விவசாயத்திற்கு மாற வேன்டும் என்பதற்காக ஜனவரி மாதம் சென்னையில் 24-ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தென் இந்திய இயற்கை வேளாண்மை மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதிகளில் உள்ள இலை தலைகளை வெட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தோம். அதுபோல் ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்து உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் மாவட்ட வாரியாக உள்ள இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பொதுமக்களும் பெருந்திரளாக இயற்கை சார்ந்த வேளாண்மை மாநாட்டில் கலந்து கொள்ள அனைவரும் முன்வர வேண்டுமென பி ஆர் பாண்டியன் கேட்டுகொண்டார்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

