தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட நூலக ஆணைக்குழு மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் – திருச்சிராப்பள்ளி இணைந்து வழங்கும் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நூலக வளாகத்தில் அஞ்சல் தலை, நாணயங்கள் , பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை ஜான் பாட்ஷா துவங்கி வைத்தார். வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமை வகித்தார்.

முதல் நிலை நூலகர் கல்யாணகுமார், மூன்றாம் நிலை நூலகர் ஜெய்சங்கர், நூலகர் ராசசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சேகரிப்பு கலைஞர்கள் பத்ரி நாராயணன் ஆளுநர் விருதாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாரணர் இயக்க ஆணையர் இளம்வழுதி, நாசர்,குணசேகரன், தாமோதரன், கமலக்கண்ணன், அப்துல் அஜீஸ், ராஜ்குமார், முகமது ஜுபைர், முகமது அயூப்,சந்திரசேகரன், சித்ரா, கீர்த்தனா, தேவகி உட்பட பலர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஆளுநர் விருதாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பாரத ரத்னா விருதாளர்கள் அஞ்சல் தலைகளும் அஞ்சல் உறைகளும் கருப்பொருளில் காட்சிப்படுத்தி பேசுகையில்,

இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் அரிய பங்களிப்புகளையும் அஞ்சல் தலைகள் மற்றும் சிறப்பு அஞ்சல் உறைகள் வாயிலாக அறிந்துகொள்வது அஞ்சல் தலை சேகரிப்பின் சிறப்பான பகுதியாகும். ஒரு அஞ்சல் தலை என்பது கடிதப் போக்குவரத்திற்கான கட்டணச் சின்னம் மட்டுமல்ல; அது ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, அறிவியல், கலை, இலக்கியம் மற்றும் சாதனையாளர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் வரலாற்று ஆவணமாகும்.பாரத ரத்னா விருதாளர்களின் அஞ்சல் தலைகளையும், முதல் நாள் அஞ்சல் உறைகளையும், சிறப்பு அஞ்சல் உறைகளையும் சேகரிப்பது ஒரு சிறந்த வரலாற்றுப் பணியாகும். ஒவ்வொரு அஞ்சல் தலையும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கையைப் பேசுகிறது. ஒவ்வொரு அஞ்சல் உறையும் ஒரு காலகட்டத்தின் வரலாற்றை நினைவூட்டுகிறது.

அஞ்சல் தலை சேகரிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது வரலாற்றைப் பாதுகாக்கும் அறிவார்ந்த சேவையாகும்.பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் இவ்விருது தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மனித முயற்சியின் எந்தவொரு துறையிலும் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கும் வகையில் விருதின் வரம்பு விரிவுபடுத்தப்பட்டது.
கலை மற்றும் பண்பாட்டுத் துறை,
இலக்கியம் மற்றும் கல்வித்துறை,
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,
பொதுச் சேவை மற்றும் நிர்வாகம்,
சமூக சேவை மற்றும் மனிதநேயம்,
விளையாட்டுத் துறை, நாட்டின் வளர்ச்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்பு,மனிதகுல நலனுக்கான அரிய சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது.
பாரத ரத்னா விருதுக்குத் தனிப்பட்ட விண்ணப்ப நடைமுறை கிடையாது. இந்தியப் பிரதமர் தகுதியானவர்களின் பெயர்களைக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கிறார்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் விருது அறிவிக்கப்படுகிறது. ஒரு ஆண்டில் அதிகபட்சம் மூன்று நபர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்படும்.பாரத ரத்னா பதக்கம் அரசமர இலையின் வடிவத்தில் அமைந்துள்ளது. வெண்கல நிறத்தில் உருவாக்கப்பட்டு, அதன் முன்புறத்தில் சூரியனின் உருவமும் தேவநாகரி எழுத்தில் ‘பாரத ரத்னா’ என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும். பின்புறத்தில் இந்திய அரசின் சின்னமும் தேசிய வாசகமும் இடம்பெற்றிருக்கும்.
இந்த விருதுடன் பணப்பரிசு வழங்கப்படுவதில்லை. குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படுகின்றன.

1954 ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
சி. ராஜகோபாலாச்சாரி – 1954,
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் – 1954, டாக்டர் சி.வி. ராமன் – 1954,அன்னை தெரசா – 1980,டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் – 1997,எம்.எஸ். சுப்புலட்சுமி – 1998,அமர்த்தியா சென் – 1999,
எம்.ஜி. ராமச்சந்திரன் – 1988, சச்சின் டெண்டுல்கர் – 2014,பிரணாப் முகர்ஜி – 2019,கர்பூரி தாக்கூர் – 2024,எல்.கே. அத்வானி – 2024,பி.வி. நரசிம்ம ராவ் – 2024,
சௌதரி சரண் சிங் – 2024,எம்.எஸ். சுவாமிநாதன் – 2024 ஆவர். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஆளுமைகள் பாரத ரத்னா விருது பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். சி. ராஜகோபாலாச்சாரி, டாக்டர் சி.வி. ராமன், எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் தங்களுடைய துறைகளில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

இவர்களில் பலரின் நினைவாக இந்திய அஞ்சல் துறை நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்படும் நாளில், அந்த அஞ்சல் தலையைப் பதித்து, வெளியீட்டு நாளுக்கான சிறப்பு முத்திரையுடன் வெளியிடப்படும் அஞ்சல் உறை முதல் நாள் அஞ்சல் உறை எனப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஆளுமையின் புகைப்படம், வாழ்க்கைக் குறிப்பு, சாதனைகள், அஞ்சல் தலை வெளியீட்டுத் தேதி மற்றும் வெளியீட்டு இடம் ஆகியவை இடம்பெறலாம்.ஒரு முக்கியமான ஆளுமை, வரலாற்று நிகழ்வு அல்லது நிறுவனத்தைப் போற்றும் வகையில் அஞ்சல் துறை வெளியிடும் சிறப்பு உறை சிறப்பு அஞ்சல் உறை எனப்படுகிறது. இதில் தனித்துவமான வடிவமைப்பு, சிறப்பு அஞ்சல் முத்திரை மற்றும் வெளியீட்டு விவரங்கள் இடம்பெறலாம். அவ்வாறு பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அஞ்சல் உறையை வெளியிடபட்டுள்ளது.

பாரத ரத்னா விருதாளர்களின் அஞ்சல் தலைகளையும், முதல் நாள் அஞ்சல் உறைகளையும், சிறப்பு அஞ்சல் உறைகளையும் சேகரிப்பது ஒரு சிறந்த வரலாற்றுப் பணியாகும். ஒவ்வொரு அஞ்சல் தலையும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கையைப் பேசுகிறது. ஒவ்வொரு அஞ்சல் உறையும் ஒரு காலகட்டத்தின் வரலாற்றை நினைவூட்டுகிறது என்றார்.

செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed