ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களை செவிலியர்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற புகார் வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் அரசு மருத்துவமனையில்ஆய்வு நடத்தினார்.
குழந்தைகள் வார்டு பகுதியில் சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளிடம் கனிவாக பேசி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா குறைகள் இருந்தால் தன்னிடம் தெரிவிக்கலாம் எனவும் பெற்றோர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் திட்டத்தின் கீழ் தங்க மோதிரத்தை வழங்கினார்.

மேலும், தாய் சேய் நலப் பெட்டகத்தையும் வழங்கினார். அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக பணியாட்கள் தேவை என மருத்துவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட மருத்துவ மற்றும் மக்கள் நல பணிகள் இணை இயக்குநர்(பொறுப்பு) டாக்டர். எ. காளிராஜ் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் உடனிருந்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476778
