ஸ்ரீவில்லிபுத்தூரில், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகௌதம் கோயல்தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்ட் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்போலீஸ் நிலையத்தில் இருந்து துவங்கிபஸ் நிலையம் சின்னக்கடை வீதி காமராஜர் சிலை பைபாஸ் ரோடு வழியாக நடந்தே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கௌதம் கோயல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது ;
ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீசார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாறு வேடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்தீபாவளி நேரங்களில் விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாட பஸ்களில், ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாதுதீபாவளி பண்டிகையை ஒட்டி போலீஸ் வந்து அதிகப்படுத்தப்பட்டுள்ளது, என்று கூறினார்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
