கொட்டும் மழையில் 4 மணி நேரம் தவித்த குடும்பத்தினர் — மின்சாரம் இல்லாததால் பரிதவிப்பு!
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பகுதியில், அப்பன் ராஜ் (75) என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலைத் தகனம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் தவித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவரின் உடலைத் தகனம் செய்ய வேண்டிய இடத்தில் மின்சாரம் இல்லாததால், கொட்டும் மழையிலும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவரது மகள் வினோத பாரதி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இறந்தவரின் உடலுக்குக்கூட உரிய நேரத்தில் இறுதி மரியாதை செலுத்த முடியாத நிலை ஏன்? தகன இடத்தில் மின்சார வசதியும் மாற்று ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டிருந்தனவா? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அடிப்படை வசதிகள் தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டிய நிர்வாகம், இத்தகைய அவலங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டாமா என்ற ஆதங்கமும் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து, தகன இடங்களில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
செய்திகள் : A.மகேஷ் / எதிரொலி . இன் /. 8939476777
