கட்டணம் கட்ட முடியாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் படிக்கும் மாணவர்களிடம் கருணை பார்வையை காட்டுங்கள் தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் சபாநாயகர் வேண்டுகோள்

சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூரில் அமைந்துள்ள மாதா தனியார் மருத்துவ கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள் மருத்துவர்கள் பேராசிரியர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார் இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மருத்துவ மாணவர்களிம் மேடையில் பேசிய JCD பிரபாகர் ;

கல்லூரி நிர்வாகத்திடம்
ஒரே ஒரு வேண்டுகோள் தான் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவர்கள் இங்கு சேர்ந்து இருந்தால் காலதாமதமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வந்தால் இப்போது காட்டிக்கொண்டிருக்கின்ற கருணை பார்வை போல எப்போதும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் சிபாரிசு என்று வருகின்றபோது கல்லூரியில் கட்டணம் கட்டுவது கால தாமதமாக இரண்டு மாதம் டைம் கொடுங்கள் படித்து முடித்துவிட்டு கட்டணம் கட்டணம் கட்டவில்லை என்றால் சான்றிதழ்கள் வழங்கவில்லை என்று கூறுகின்றார்கள் எனவே பணம் பெறுவதை மட்டும் தேவையாக இல்லாமல் யாராக இருந்தாலும் அவர்கள் படிப்புக்கு உதவ வேண்டும் அவர்கள் நிலைமை உயர வேண்டும் என உறுதுணையாக இருக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்வதாக வேண்டுகோள் வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜேசிடி பிரபாகர்”

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஒரு அட்டவணை போடப்பட்டு அந்த அட்டவணை படி விசாரணை நடைப்பெற்று கொண்டிருக்கிறது என்றார்.

செய்திகள் : லக்ஷ்மி காந்தன் /எதிரொலி . இன் /. 8939486777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed