மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏலவார்க் குழலி அம்மன் ஏடகநாதர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது. பிரதோஷ விழாவை முன்னிட்டு திருவேடகம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

இந்நிலையில், பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் பாதை சேரும் சகதியுமாக இருந்ததால், பிரதோஷ விழாவிற்கு வந்த பொதுமக்கள் பக்தர்கள் கடும் வேதனை அடைந்தனர். இரண்டு வருடங்களுக்கும் மேலாக கோவிலுக்கு செல்லும் பாதை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் பக்தர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், தற்போது வரை சரி செய்யாத நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 15 ம் தேதி தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் கனமழை பெய்து வரும் நேரத்தில் கோவிலுக்கு செல்லும் பாதை மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் பிரதோஷ வழிபாட்டிற்காக கோவிலுக்கு வந்த பக்தர்கள் சேரும் சகதியுமாக இருந்த பகுதியில் சென்று சாமி தரிசனம் செய்ததில் மனவருத்தம் ஏற்பட்டதாக கூறிச் சென்றனர். அதிகாரிகள் கோவில் பகுதியில் சேரும் சகதியுமாக காணப்படும்
பகுதியை சீரமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed