கிருஷ்ணகிரி அருகே மகாராஜா கடையில் உள்ள கிராமப்புற சமூக நல வாழ்வு அறக்கட்டளை மற்றும் யோகா வித்யா ப்ராணிக் ஹீலீங் பவுண்டஷன் ஆப் தமிழ்நாடு சார்பில் ஊட்டச்சத்து உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ராஜேஷ் அவர்கள் கலந்து கொண்டு மூன்றாம் ஆண்டுக்கான ஊட்டச்சத்து உணவு வகைகளை மகாராஜாகடை அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நோட்டு, பேனா, தட்டு, டம்ளர் போன்ற உபகரணங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், அவர் கூறியதாவது, ஆறு விதமான ஊட்டச்சத்து பயிறு வகை வாரம் தோறும் இரண்டு நாட்கள் என மாலை நேரங்களில் வழங்கப்படுவதாகவும், இத்திட்டத்தால் 250 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றும், ஊட்டச்சத்து உணவின் அவசியத்தை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மற்ற பள்ளிகளுக்கும் இதன் தேவை அறிந்து விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார். இதற்கு நன்கொடை வழங்கிய யோகா வித்யா ப்ராணிக் ஹீலீங் பவுண்டஷன் ஆப் தமிழ்நாடு, எக்செல் சரிடபிள் டிரஸ்ட் மற்றும் அக்ரோ பயோ கேர் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில் தலைமை ஆசிரியர் மேரி ரோசலின், PTA தலைவர் வஜீர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்திகள் மாருதி மானோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed