அறக்கட்டளை சேர்மன் கென்னடி ஏற்பாடு…
சிவகங்கையை அடுத்துள்ள பாசாங்கரை கிராமத்தை மையமாக வைத்து செயல்படும் இந்த கென்னடி சமூக வளர்ச்சி அறக்கட்டளையானது கடந்த 2013 வது ஆண்டிலிருந்து தொடர்ந்து மக்கள் நலப்பணிகளில் அக்கறை காட்டி , மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் , மரக்கன்று நடுதல் , போதை விழிப்புணர்வு , சுற்றுசூழலை பேணிப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது..
அந்த வகையில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதென முடிவெடுத்து , முதல் கட்ட துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலரும் , கென்னடி சமூக வளர்ச்சி அறக்கட்டளையின் நிறவனருமான ஆறு. கென்னடி தலைமையில் தலைமையேற்க முதல் மரக்கன்றினை சிவகங்கை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் நடவுசெய்து தொடங்கி வைத்தார்.

சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் , கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் , வனத்துறை அலுவலர் பிரவீன் , சமூக ஆர்வலர் கொட்டகுடி குருசாமி , சமூக ஆர்வலர் வெங்கடேசன் , ஊராட்சி பணித்தளப் பொறுப்பாளர் இருளி , கிராம அம்பலகாரர் பாசாங்கரை முத்துராஜா , ஊராட்சி வார்டு மெம்பர் பெருமாள் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்…
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கென்னடி சமூக வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஆறு. கென்னடி சிறப்பாக செய்திருந்தனர்.
செய்திகள் : ஆனந்த் / எதிரொலி
