​காஞ்சிபுரம் – பனப்பாக்கம் வழித்தடத்தில் பரபரப்பு. சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.


​
​தமிழகத்தில் மகளிர் நலனைக் கருத்தில் கொண்டு ‘வெற்றிப் பயணம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மகளிர்கள் அனைத்து நகர அரசுப் பேருந்துகளிலும் 80 கிலோமீட்டர் தூரம் வரை கட்டணமின்றி இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.

​சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், எரிபொருள் செலவைக் குறைக்கவும் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் டீசல் மற்றும் பெட்ரோலுக்குப் பதிலாக, இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

​இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து பனப்பாக்கம் வழித்தடத்தில் இயக்கப்படும் ‘வெற்றிப் பயண’ அரசுப் பேருந்து ஒன்று, வழியில் செல்ல முடியாமல் நின்றுள்ளது. இதையடுத்து, பொலேரோ லோடு ஆட்டோ ஒன்றின் மூலம் அந்த அரசுப் பேருந்தைக் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

​இது குறித்துப் போக்குவரத்துத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “சம்பந்தப்பட்ட பேருந்திற்குத் தேவையான இயற்கை எரிவாயு சரியான நேரத்தில் கிடைக்காததால், பேருந்தை இயக்க வழியின்றி லோடு ஆட்டோ மூலம் இழுத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளனர்.

​பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அரசுப் பேருந்தை லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற சம்பவத்தை காணும்போது, யானையை பூனை இழுத்து சென்ற கதை போல் ​உள்ளது என
அப்பகுதி மக்களிடையே பேசும் பொருளாகி, சமூக வலைதளங்கள் தற்சமயம் வைரலாக பரவி வருகிறது.

செய்திகள் : லட்சுமி காந்தன் எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed