கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கடந்த ஜூன் 1, 2026 அன்று ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில், சாமல்பட்டி சேர்ந்த 25 வயதான லிங்கேஸ்வரன் படுகாயடைந்து, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
அவருக்கு ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அவரது இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களும் (Quadriparesis) செயலிழந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஜுன் 2, 2026 அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது கழுத்துப் பகுதியில் உள்ள C4-C5 முதுகெலும்பு முறிவடைந்து, தண்டுவடம் கடுமையாக அழுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் மரு.க.சத்யபாமா, MS (Gen.Surgeon) அவர்களின் அறிவுரைப்படி, நோயாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் சிகிச்சையின் அவசியத்தை விளக்கி, செயற்கை சுவாச சிகிச்சையில் இருந்த அவரை மீட்டு எலும்பியல் மற்றும் மயக்கவியல் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் ஜூன் 13,அன்று முன்புற கழுத்து எலும்பு அறுவைசிகிச்சை (Anterior cervical corpectomy) செய்தனர்.
இதில் தண்டுவடத்தின் அழுத்தம் நீக்கப்பட்டு, ‘கேஜ்’ பொருத்தி கழுத்து எலும்பு நிலைப்படுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்ட இளைஞர், பிசியோதெரபி சிகிச்சை மூலம் படிப்படியாகக் குணமடைந்தார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடர அறிவுறுத்தி நலமுடன் 2.07.2026 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொடர் சிகிச்சை மற்றும் பிசியோதெரபி சிகிச்சையின் முடிவில் செப்டம்பர் 24, இன்று நடைபெற்ற 3-வது மாத பரிசோதனையில், அவர் யாருடைய உதவியுமின்றித் தாமாகவே நடக்கும் நிலையை அடைந்துள்ளார். அவரது இரண்டு கால்கள் மற்றும் வலது கையில் முழுமையான பலம் திரும்பியுள்ளது. இடது கை விரல்களின் பிடியில் மட்டும் லேசான பலவீனம் உள்ளது. சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் பிசியோதெரபி சிகிச்சையால் வாலிபர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

மருத்துவ குழுவினர் மருத்துவ கண்காணிப்பாளர் மரு சந்திர சேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. M. செல்வராஜ், DR. மகேஷ்ராம் ortho பேராசிரியர், DR.தனசேகரன் ortho, DR. செந்தில் ortho உதவி பேராசிரியர்கள் DR.மௌரி ரஞ்சித், மயக்கவியல் உதவி பேராசிரியர், மற்றும் செவிலியர்கள் அறுவை அரங்க பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
