சோழவந்தானில் முதியோர் உதவித்தொகை தற்போது வரை கிடைக்காமல் தபால் நிலையங்களுக்கும் வங்கிகளுக்கும் தாலுகா அலுவலகங்களுக்கும் வயதான நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள தபால் அலுவலகத்திற்கு தினசரி காலை 100க்கும் மேற்பட்ட வயதானவர்கள் கையில் வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டு வந்து முதியோர் உதவித்தொகை தங்களுக்கு இன்னும் ஏறவில்லை என அதிகாரிகளிடம் கூறுகின்றனர்.

அங்குள்ள அதிகாரிகள் வங்கிக்கு செல்லுமாறு கூறுவதாகவும் வங்கிக்கு சென்றால் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்று பதிய வேண்டும் என்று கூறுவதாகவும் இதனால் தாலுகா அலுவலகத்திற்கும் வங்கிகளுக்கும் தபால் அலுவலகத்திற்கும் வயதான நிலையில் மாறி மாற அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அதிலும் ஒரு சில வயதான முதியோர்களிடம் உங்கள் மொபைல் போனை கொண்டு வருமாறும் அதில் ஓ டி பி என்ற எண் வரும் அதை சொல்ல வேண்டும் அப்போதுதான் உங்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை வர வைக்கப்படும் என்று அலுவலகத்தில் கூறுவதாகவும் கூறுகின்றனர்.

70 வயது முதிய பெண்மணி கூறுகையில் என்னிடம் செல்போனே இல்லை, ஆகையால் யாராவது செல்போன் கொடுங்கள் என தபால் அலுவலகம் முன்பு நின்று போவோர் வருவோரிடம் செல்போன் கேட்டு நின்றது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.

பத்தாம் தேதி முதியோர் உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய நிலையில் தற்போது 15 நாட்களுக்கு மேலான நிலையில் தொகை வரவைக்கப்படாததால் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. முக்கியமாக உதவித்தொகை கிடைக்காமல் ஒருவேளை சாப்பிட வழி இல்லாமல் உள்ளனர். மருத்துவ தேவைகளுக்காகவும் அந்த தொகை பயன்பட்டு வந்த நிலையில் மருத்துவ சிகிச்சையும் செய்ய முடியாத நிலையில் பலர் உள்ளனர்.

” தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய ஆய்வு செய்து முதியோர் உதவி தொகை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என இந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுதல் எடுத்துள்ளனர்

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed