பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததையொட்டி தமிழ்நாடு சிறு – குறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு காலை உணவுகளை வழங்கினார் .

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், தமிழ்நாடு சிறு – குறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா மாணவர், மாணவியர்களுக்கு காலை உணவுகளை வழங்கினார்.

தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா பேசியதாவது :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஊரகப்புறம் , நகர்ப்புறங்களில் உள்ள 1,120 பள்ளிகளில் 47,174 மாணவர், மாணவியர்கள் பயனடைந்து உள்னர். இதில் 892 அரசு ஊரசுப் பள்ளிகளில் 29,107 மாணவர், மாணவியர்களும், 32 அரசு நகர்ப்புறப் பள்ளிகளில் 2,869 மாணவர், மாணவியர்களும், 161 அரசு உதவிபெறும் ஊரகப் பள்ளிகளில் 10,982 மாணவர், மாணவியர்களும், 35 அரசு உதவி பெறும் நகர்ப்புறப் பள்ளிகளில் 4,916 மாணவர், மாணவியர்களும் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் 47,174 மாணவர், மாணவியர்களுக்கு பள்ளி நாட்களில் தினமும் காலை உணவு வழங்கப்படவுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள 1,053 பள்ளிகளிலும், பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள 67 ஒருங்கிணைந்த சமையல் கூடங்களிலும் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மேலும், அரசின் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 15.07.2026 முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக 370 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஊரகப் பகுதிகளில் 328 பள்ளிகளும், நகர்ப்புறப் பகுதிகளில் 42 பள்ளிகளும் உள்ளன். இப்பள்ளிகளில் பயிலும் 33,093 மாணவர், மாணவியர்களுக்கு பள்ளி நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை உணவு வழங்கப்பட உள்ளது.
காலை உணவுத் திட்டத்திற்கான உணவுப் பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் பெறப்படுகின்றன.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரவை, கோதுமை ரவை, சேமியா ஆகியவையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.
மேலும், வாரந்தோறும் மாணவர், மாணவியர்களுக்கு திங்கள் வெண்பொங்கல் , காய்கறி சாம்பார், செவ்வாய் ரவா கிச்சடி , காய்கறி சாம்பார், புதன் வெண்பொங்கல் , காய்கறி சாம்பார், வியாழன் கோதுமை ரவா உப்புமா , காய்கறி சாம்பார், வெள்ளி சேமியா கிச்சடி , காய்கறி சாம்பார் ஆகியவை சுழற்சி முறையில் காலை உணவாக வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு சத்தான , தரமான காலை உணவு வழங்கப்பட்டு, அவர்கள் பள்ளிக்கு வருகை தருவதை ஊக்குவிப்பதுடன், கல்வி கற்கும் திறனையும் மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு சிறு — குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மாணவர்- மாணவியர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர்.
நிகழ்ச்சியில் , பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தில் பள்ளி மாணவர் – மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தார். மாணவர்- மாணவியர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். அது சமயம், வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் உடன் இருந்தார். நிகழ்வில் , அரசு அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed