விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் குடும்ப தகராறில் மனைவியை வெட்டி படுகொலை செய்த கணவனுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இது பற்றிய விபரம்…

வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி மாரியப்பன் (55). இவரது மனைவி பரமேஸ்வரி (54) இவர்களது மகள் அழகு ராணி (33) என்பவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து தாயின் வீட்டில் வசித்து வந்தார். மாரியப்பன் தனது மருமகனுடன் சமாதானம் பேசினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, அவரது மனைவி பரமேஸ்வரி மருமகன் உடன் சமாதானம் பேசினார். இதற்கு மாரியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் சண்டை அதிகமானது. இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மனைவியை பட்டப் பகலில் அறிவாலால் வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் கொலை செய்த மாரியப்பனுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

செய்திகள் : தேவதர்ஷினி /. எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *