நெல்லையில், நாட்டுச் செங்கல் மற்றும் தளஓடு
உரிமையாளர்கள் நலச்சங்க கலந்தாய்வுக் கூட்டம், நிருவாகிகள் மாவடி ரமேஷ், அந்தோணி, ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்றது…
இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிறிஸ்டோபர் பங்கேற்பு:
கட்டணம் செலுத்தி மண் எடுக்க அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை…
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட சேம்பர் பிரிக்ஸ் நாட்டுச் செங்கல் மற்றும் தள ஓடு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மாவடி எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.அந்தோணி பாண்டியன் வரவேற்றார். பொருளாளர் எம்.ஐயப்பன் தீர்மானங்களை வாசித்தார்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலாளருமான டாக்டர் எஸ்.கே. கிறிஸ்டோபர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட சேம்பர் பிரிக்ஸ் நாட்டுச் செங்கல் மற்றும் தள ஓடு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் “நாட்டுச் செங்கல், தள ஓடு மற்றும் சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர்களுக்கு உரிய உரிமத்தை விரைந்து வழங்க வேண்டும். நாட்டுச் செங்கல் மற்றும் தள ஓடு செய்வதற்கு தேவையான மண்ணை எடுப்பதற்கு “அரசுக்கு நியாயமான கட்டணம் செலுத்தி குளங்களில் இருந்து எடுப்பதற்கு” அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்தனர்.

மேலும், இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசினுடைய கவனத்திற்கு கொண்டுச் சென்று நிறைவேற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சங்கத்தின் தலைவர் மாவடி எஸ்.ரமேஷ் தலைமையில் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.கே. கிறிஸ்டோபரிடம் வழங்கினர்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தென்காசி நாட்டுச் குளை தலைவர் கணேசன், பணகுடி பகுதித் தலைவர் முத்து மற்றும் பணகுடி சுந்தர், ஸ்ரீதர், ஜான்சன், துரை, மாவடி கண்ணன், களக்காடு எஸ்.பிச்சாண்டி, பாலாமடை சி.ஆறுமுகம், கங்கனாகுளம் மில்டன், சிவகிரி பகுதிச் செயலாளர் செ.சுப்பிரமணியன், பழனியப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


முடிவில் சேம்பர் பிரிக்ஸ் நாட்டுச் செங்கல் மற்றும் தள ஓடு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஐயப்பன் நன்றி கூறினார்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.
