உலகப் பிரசித்தி பெற்ற
மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்துக்கும் மிகவும் அருகே உள்ள மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கத்தில் இப்பொழுது செயல்படாமல் இத்த திரையரங்கு மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை மழை பெய்த காரணத்தினால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வீரர்கள் வரவழைக்கப்பட்டு
தீயை அணைக்க பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பொதுமக்கள் அதிக அளவில் நடமாடக்கூடிய பகுதியான தகவல் ரோடு பகுதியில் அதிக அளவு கடைகளும் உள்ளது.

மேலும் கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாகசாலை ஆனது இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பு மேலும் கும்பாபிஷேகத்திற்காக மதுரை மாவட்டத்தில் இருந்து வரவேற்கப்பட்டுள்ள மதுரை டவுன், திருப்பரங்குன்றம், அனுப்பானடி, திருமங்கலம், உசிலம்பட்டி, கல்லுப்பட்டி, மேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் கோவிலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவ் வாகனங்கள் அனைத்தும் வரவழைக்கப்பட்டு தீய அணைக்கும் பணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி வருகிறார்கள்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *