கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வரும் தினேஷ்குமார் அவர்களை தமிழக அரசு சிறந்த மாவட்ட ஆட்சியராக அறிவித்து விருதுகள் வழங்கி கௌரவித்தது.

தமிழக அரசிடம் இருந்து சிறந்த மாவட்ட ஆட்சியராக விருது பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களுக்கு சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் தனது வாழ்த்தினை தெரிவித்து இன்னும் பல்வேறு விருதுகள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்,

தொடர்ந்து சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சதிஷ், மாநில மகளிர் செயலாளர் பத்மா, மாவட்ட செயலாளர் மாதேஷ், மாவட்ட தலைவர் சிவ சக்திவேல், மாவட்ட இணை செயலாளர் தில்லை ராஜா, மாவட்ட துனைத் தலைவர் சுந்தரேசன், மாவட்ட மகளிர் தலைவி ராதா, மாவட்ட துணைத் தலைவர் சரண்யா, நுகர்வோர் குரல் செய்தி ஆசிரியர் நாகராஜ் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியருக்கு பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *