விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிறப்பு நிலை நகராட்சியாகும் மக்கள் தொகை அதிகம் மிகுந்த நகராட்சி பகுதியில் ராஜபாளையம் சுற்றியுள்ள 86 கிராமங்களைச் சார்ந்த கிராம மக்கள் தினமும் வந்து செல்லும் நகரமாக இருந்தாலும் குடிநீர் என்பது மிகவும் தட்டுப்பாடாக உள்ளது ராஜபாளையம் நகராட்சி கோடை குடிநீர் தேக்கத்தில் தண்ணீர் ஓரளவு எடுத்து நகராட்சிக்கு சொந்தமான கிணறுகளிலும் நகராட்சி நீர் தேக்கம் மூலம் ராஜபாளையம் மக்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்து வந்தனர்.

தற்போது முறையாக குடிநீரை எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு உரிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தற்போது 14 தினங்களாகியும் குடிநீர் வரவில்லை. இது குறித்து விவரம் கேட்டபோது தண்ணீர் இல்லை என்ற பதில் மட்டுமே வருகிறது. இந்நிலையில் ராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீருக்காக மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. குடிநீர் வாகனத்தில் வரும் தனியாரிடம் குடத்திற்கு பத்து ரூபாய் வரை கொடுத்து குடிநீர் உபயோகிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடியாக ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கு 4 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை கண்டித்து ராஜபாளையம் நகராட்சி 16-வது மற்றும் 20 வது வார்டு பொதுமக்கள் மற்றும் பெண்கள் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். தகவல் கிடைத்து வருகை தந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சமரசம் செய்து விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறி கூட்டத்தை கலைத்தனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed