சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம்பிள்ளை யின் 155-வது பிறந்தநாள்விழா மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 11 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சோழவந்தான் வடக்கு ராதா வீதி வெள்ளாளர் உறவுமுறை சங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம்முகாமை சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை, கிருஷ்ணன்கோவில் சங்கரா மருத்துவமனை மற்றும் சோழவந்தான் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது. இம்முகாமிற்கு, வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமார்பிள்ளை தலைமை தாங்கினார்.

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் மா. த. நாகு ஆச்சாரி, நிர்வாகிகள் அண்ணாதுரை, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்திய பிரகாஷ், ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜகுமாரன் மற்றும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் சங்கரா கண் மருத்துவமனையின் ஜெயராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இலவச கண் சிகிச்சை முகாமில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.

பரிசோதனை செய்தவர்களில் 80 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும், தீவிர கண் பாதிப்பு கண்டறியப்பட்ட 40 நபர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக, கிருஷ்ணன்கோவில் சங்கரா மருத்துவமனைக்கு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் நன்றி கூறினர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed