மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் தொகுதியிலே மின்தடை ஏற்படுவதால் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பாதிப்பு…

மதுரை‌ திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அரசு மருத்துவமனையில் அவசரகால பயன்பாட்டிற்கான ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி, மின்வெட்டு நேரத்திலும் தடையின்றி மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின் துறை அமைச்சராக உள்ள நிர்மல் குமார் தனது தொகுதியிலேயே அடிக்கடி ஏற்படும் மின்பட்டினால் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் உடனடியாக மின்தடையை சீரமைத்து மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed