பொன்னேரியில் தாங்கும் கரங்கள் அறக்கட்டளையின் சார்பில், அன்னை தெரேசா பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படக்கூடிய தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் தாங்கும் கரங்கள் அமைப்பின் நிர்வாகிகள் தானுவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். சுரேஷ் அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.


அன்னை தெரேசா அவர்களின் பிறந்தநாளில், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் குழந்தைகளை மேடையில் ஏற்றி அவர்களி ஓன் கரங்களால் கேக் வெட்டி அன்னை தெரேசா அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மேலும், நலிவுற்ற குடும்பத்தினர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பொன்னேரி வட்டாட்சியர் ஜெயகர் பிரபு மற்றும் பொன்னேரி காவல்துறை ஆய்வாளர் சிவகுமார், பொன்னேரி கல்வி மாவட்டதின் மாவட்ட அலுவலர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னை தெரேசா அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை விளக்கமாக எடுத்துக் கூறியும் அவருடைய தொண்டுகளும் குறித்தும் அவருடைய சேவைகள் குறித்தும் பேசினர்.

வட்டாட்சியர் ஜெயகர் பிரபு பேசுகையில் ; அன்னை தெரசா அவர்கள் பிறப்பு முதல் அவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்த தொண்டுகள் மற்றும் சமூகப் பணிகளை நினைவு கூர்ந்தார். மேலும், அவர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியாவில் இருந்து தனது இறுதி காலம் வரை கொண்டு செய்தார் என்பதை நாம் நினைத்து பெருமைப்பட வேண்டும் என நிகழ்ச்சியுடன் கூறினார்.


பொன்னேரி காவல் ஆய்வாளர் அவர்கள் பேசுகையில் ; அன்னை தெரேசா அவர்களுடைய சேவைகளை எடுத்து உரைத்ததுடன், நமது நாட்டில் அன்னை தெரேசா அவர்களின் தொண்டுகளை நினைவு கூறும் வகையில் நடைபெறக்கூடிய இது போன்ற நிகழ்வுகளை, தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இந்த காலத்தில், சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்கள் சொந்த நாட்டு மக்களும் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டார். இதே போன்ற நிகழ்வுகளை அடுத்த முறை செய்யும்போது அதை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.


மாவட்ட கல்வி அலுவலர் அய்யப்பன் அவர்கள் உரையாற்றுகையில் ; உலகமே போற்றக்கூடிய தொண்டு உள்ளத்துடன் சமூக சேவை செய்த அன்னை தெரசா அவர்களுடைய பிறந்த நாளில் நாம் நினைவு கூறும் போது, இது போன்ற நிகழ்வுகளை நடத்துவது நமக்கு பெருமை, இதில் கலந்து கொண்டது எனக்கு பெருமை எனவும், இங்கு தொண்டு நிறுவனங்களை நடத்துபவர்களும், சமூக சேவை செய்யக்கூடியவர்களும் பலர் இளைஞர்களாக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. என அனைவரையும் வாழ்த்தி பேசினார்.


நினைவு பரிசை பெற்றுக் கொண்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் தங்களுடைய அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், இதுவரை செய்திருக்கக்கூடிய பணிகள் குறித்தும், வருங்காலங்களில் அவர்கள் செயல்பட போகக்கூடிய வழிமுறைகளை எடுத்து கூறியும் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில், வள்ளலார் நினைவிட நிர்வாகி தோழர் ரவி அவர்களும், நேதாஜி அமைப்பின் நிர்வாகி ஸ்ரீதர் பாபு அவர்களும், மெதூர் சேகர், கற்கை நன்று அமைப்பின் நிர்வாகி வடிவேலு, மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் தலைவர் பாலகிருஷ்ணன், ஏகலைவன் கட்டணமில்லா பயிற்சி மையத்தின் பயிற்சி ஆசிரியர் கோகுல்நாத் ராஜு, ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் இறுதியில், அன்பே சிவம் அமைப்பின் நிர்வாகி நன்றி கூறினார்.


செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

