திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சி கரிமணல் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளலார் கருணாலயம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்டது. லைட் ஹவுஸ் மேம்பாலம் அருகில் அமைந்துள்ள வள்ளலார் கருணாலயத்தை செம்பாசி பள்ளிகுப்பம் ராஜ் குரு நிர்வாகித்து வருகிறார்.

பழவேற்காடு ஆன்மீக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஆலயத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஜோதியாக நடுவில் இருக்க வள்ளல் பெருமான் வலது புறமாகவும் ஸ்ரீமத் குரு ராமானந்த சுவாமி இடது புறமாகவும் வீட்டிருக்கிறார்கள். ஆலயத்தில் தினசரி உலக நலனுக்காகவும், கர்ப்பிணி தாய்மார்கள் சுகப்பிரசவம் நடக்க வேண்டி பிரார்த்தனையும், உலக அமைதி போர் இல்லாத நல்லுலகம் வேண்டியும், உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் நல்ல முறையில் படித்து பட்டம் பெற்று வாழ்வில் மேம்பட வேண்டும் எனவும் வழிபாடு நடைபெற்று வருகிறது.

மதிய உணவாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தினசரி உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நலத்திட்ட உதவிகளாக மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் ஏழை எளியோருக்கு பயன்பெறுமாறு இந்த ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.

தைப்பூச தினம் அன்று விசேஷ விழாவும், வள்ளலார் பிறந்த தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடும், ஸ்ரீமத் ராமானந்த சுவாமிக்கு ஆடி கிருத்திகை அன்று விசேஷ பூஜையும் வழிபாடும் நடைபெற்று வருகிறது.
இந்நாட்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed