ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று அதிகாலை ஆட்டோ கவிழ்ந்து வரலட்சுமி (வயது 57) என்ற பெண் பரிதாபமாக இறந்தார் அவரது உறவினர்கள் மற்றும் டிரைவர் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, உள்ளது புதுப்பட்டி அந்த பகுதியில் வசித்து வந்தவர் வரலட்சுமி (57 ) மற்றும் அவரது உறவினர்கள் மைதிலி (65) ராதாகிருஷ்ணன் (75) இவர்கள் சென்னை சென்று விட்டு இன்று அதிகாலை ரயில் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தடைந்தனர். பின்னர், சுமார் 5 மணி அளவில் ஆட்டோ ஒன்றில் தங்களது சொந்த ஊரான வ புதுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆட்டோவை டிரைவர்
வ புதுப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (41) என்பவர் ஓட்டி வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் அருகே செல்லும் போது திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. அதில், வரலட்சுமி உறவினர்கள் ராதாகிருஷ்ணன் மைதிலி மற்றும் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் ஆகியோர் காயமடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வரலட்சுமி (57) பரிதாபமாக இறந்தார். காயமடைந்த உறவினர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் மைதிலி ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் ஆகியோருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆட்டோ கவிழ்ந்து பெண் ஒருவர் இறந்த சம்பவம் வ புதுப்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூதாட்டி வரலட்சுமி உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
