கிருட்டினகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த “நீட்” எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணக்குழுவினரை கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மத்தூர் சிவம்பட்டி எல்லையில் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் பயணக்குழுவினரை வரவேற்றனர்.

ஓய்வறிய உழைப்பாளி தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணாக்கர் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ( 93 வயது இளைஞர்) மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைப்படி “நீட்” தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சாரம்.

தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணக்குழுவினர். திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் ச.மணிமொழி தலைமையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பெ.செல்லதுரை ஒருங்கிணைப்பிலும், மாநில மாணவரணி துணைச் செயலாளர் வெ.இளஞ்செழியன், பிரச்சார சொற்பொழிவாளர் திராவிட மாணவர் கழக துணை செயலாளர் இளமாறன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.செயராமன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 25- இருசக்கர வாகனங்களில் பிரச்சாரக் குழுவினர் பங்கேற்றனர்.

கடந்த 22-ந்தேதி திருவண்ணாமலையில் தொடங்கிய பேரணி வேலூர், திருப்பத்தூர், கிருட்டினகிரி, தருமபுரி, சேலம், ஆத்தூரில் 25/08/2026 – நிறைவுபெறுகிறது. நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி, மாநில ப.க.துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் மு. இந்திரா காந்தி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம்,

ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன், மாவட்ட மாணவரணி தலைவர் இர.அஜய்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல. ஆறுமுகம், ஒன்றியத் தலைவர்கள் மத்தூர் சா.தனஞ்செயன், ஊற்றங்கரை அண்ணா அப்பாசாமி, கிருட்டினகிரி த.மாது, ஒன்றியச் செயலாளர்கள் வி.திருமாறன், செ.சிவராஜ், பெ.செல்வேந்திரன், மாவட்ட ப.க.துணைச்செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட துணைத் தலைவர்கள் மு.வேடியப்பன், அ.வெங்கடாசலம், தொழிலாளரணி செ.ப.மூர்த்தி, மகளிரணி நிர்வாகிகள் முருகம்மாள், சிவசக்தி,பூ. இராசேந்திரபாபு, சி.இராசா, சிலம்பரசன், சரவணன் உள்பட கழக மாவட்ட, ஒன்றிய, நகர கிளைகழக பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாக பங்கேற்று வரவேற்றனர்.

பயணக்குழுவினர் மத்தூர் பேருந்து நிலையம் பெரியார் சிலையருகிலும், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திலும் தொடர்ந்து பையூர் பெரியார் சிலை அருகிலும் மூன்று மைய்யங்களில் நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி தலைமை கழக சொற்பொழிவாளர் மு.இளமாறன் உரையாற்றினர்.

பிரச்சார பயண குழுவினரை கழக நிர்வாகிகள் சிறப்பான வகையில் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed