பொன்னேரி வேலம்மாள் சர்வதேசப் பள்ளி வளாகத்தில் நீட்,ஐஐடி தேர்வுகளில் முதன்மை நிலைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது.
நீட், ஐஐடி, ஜெஇஇ மற்றுமுள்ள அனைத்து உயர்தரப் போட்டித்தேர்வுகள் மற்றும் 10, 12 அரசு பொதுத்தேர்வுகளில் முதன்மை மதிப்பெண்களைப் பெற்றுப் பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் பெருமை தேடித்தந்த 2,650க்கும் மேற்பட்ட மாணவர் பயன்பெறும் வகையில் 16 கோடி ரூபாய்க்கும் மேலான கல்வி உதவித்தொகைகள் வழங்கும் நிகழ்வு மெரிட் ஸ்காலர்ஷிப் டே-2026 நடைபெற்றது.

2,650 மாணவர்கள் இதன்மூலம் பயனடைந்தனர். கடந்த ஆண்டு வழங்கிய 14 கோடி கல்வி உதவித்தொகையை காட்டிலும் கூடுதலாக இந்த ஆண்டு 16 கோடி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.
வேலம்மாள் கல்விக் குழுமத்தின் நிறுவனர்.எம்.வி.முத்துராமலிங்கம்
முதன்மை நிலை பெற்ற மாணவர்களை வாழ்த்தினார்.
வேலம்மாள் கல்விக்குழுமத்தின் இயக்குநர் எம்.வி.எம்.சசிக்குமார் நீட்,ஐஐடி தேர்வுகளில் வேலம்மாள் பள்ளி மாணவர்களின் தொடர் சாதனைகளைப் பாராட்டினர். தேசிய அளவில் முதலிடம் பெற்ற அனைத்து முதன்மை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகைகளை வழங்கிச் சிறப்பித்தார், தமது தந்தையின் கல்வித்தொண்டு ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்றுவரும் என்றும்,தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவர்களின் உற்றதுணையாக வேலம்மாள் கல்விநிறுவனம் எப்போதும் துணைநிற்கும் என்றும் உறுதியளித்தார்.
வேலம்மாள் கல்விக்குழுமத்தின் கல்வியியல் இயக்குநர். திருமதி கீதாஞ்சலி சசிக்குமார் மாணவர்களை வாழ்த்திப் பேசும்போது திறமையான மாணவர்களின் கல்விக்கனவை நிறைவேற்றும் பயிற்சிக்களமாக வேலம்மாள்கல்வி நிறுவனங்கள் திகழ்ந்துவரும் என்று தெரிவித்தார்.

பொன்னேரி வேலம்மாள் அறிவுப்பூங்காவின் முதன்மை முதல்வர் மாதவகிருஷ்ணன் நீட்,ஐஐடி இன்னபிற தேர்வுக்காக மாணவர்கள் நம்பிக்கையோடு சேர்க்கப்படுகிறார்கள். பெற்றோர் மாணவர்களின் எதிர்ப்பார்ப்பினை நூறு சதவீதம் நிறைவேற்றும் வகையில் செயலாற்றிவருவதாகவும் தெரிவித்தார். திருவள்ளுர் கல்வி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் முதன்மை மாணவர்களை உருவாக்கிய பெருமை இக்கல்விநிறுவனத்திற்கு உண்டு என்றும், பெற்றோர். மாணவர், ஆசிரியர்களின் தொடர் ஒத்துழைப்பினால் இவை போன்ற பெருவெற்றிகள் சாதகமாகின்றன என்றார்.
நீட், ஐஐடி சாதனை மாணவர்கள் தம்முடைய வெற்றிப்பயணம் குறித்த தன்முன்னேற்ற ஊக்கமூட்டல் சொற்பொழிவு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது. மாணவர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்ததோடு நில்லாமல் இமாலய சாதனைக்கான வழிமுறைகளையும் பகிர்ந்துகொண்டது முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.
வேலம்மாள் பள்ளியின் முதல்வர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார். வேலம்மாள் இன்று ஆல்போல் தழைத்து நின்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இக்கல்வி நிறுவனத்தை நோக்கி வருவதற்கு இதுபோன்ற சாதனைகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட வேண்டும். இக்கல்வி நிறுவனம் என்றும் அதற்குத் துணைநிற்கும். ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் மாணவர்கள், பெற்றோர்கள் அவர்களின் நம்பிக்கை மேலும் பெருகவேண்டும் என்று வேலம்மாள் பள்ளி மாணவர்களின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

வேலம்மாள் சர்வதேசப் பள்ளியின் முதல்வர் சன்னி நன்றியுரை ஆற்றினார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நினைவுப்பரிசுகளையும் பதக்கங்களையும் காசோலைகளையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
16 கோடி ரூபாய்க்கும் மேலான கல்வி உதவித்தொகையினைப் பெற்றுக்கொண்ட 2,650 மாணவர்களும் பெற்றோர்களும் வேலம்மாள் கல்விநிறுவனத்திற்குத் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
