தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சியராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய
சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. அவருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ்கள் (மாவட்ட ஆட்சித்தலைவர் மாநாட்டில்) வழங்கப்பட இருக்கிறது.

இதனையடுத்து சிறந்த ஆட்சியராக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி, ரகு அவர்களும் வாழ்ந்து தெரிவித்தார்.

மேலும் மாவட்ட துணைத் தலைவர் பி.சி. சேகர், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாராயண மூர்த்தி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா, முன்னாள் வெங்கடாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஆறுமுக சுப்பிரமணி ஆகியோரும் தங்களது வாழ்த்தினை ஆட்சியருக்கு தெரிவித்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed