முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தார் பேரூர் திமுக சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பு அவரது திருவுருவபடத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் அவை தலைவர் தீர்த்தம் என்ற ராமன் பொருளாளர் கண்ணன்
இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் ராமநாதன் 6 வது வார்டு செயலாளர் ரவி சங்கங்கோட்டை சந்திரன் கண்ணதாசன் பேட்டை சதீஷ் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி செங்குட்டுவன் மணி பாண்டி செல்லப்பாண்டி ராஜா எஸ் ஆர்.சரவணன் சங்கங்கோட்டை சரவணன் முள்ளி பள்ளம் கிளை செயலாளர் கேபிள் ராஜா மாரிமுத்து சக்கரவர்த்தி தொமுச பாலசுப்பிரமணியன் சௌந்தரபாண்டி எஸ் எம் பாண்டியன் மாரிமுத்து தலைமை கழக பேச்சாளர் அருணா 15 வது வார்டு செயலாளர் முருகானந்தம் தேங்காய் கடை தவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சோழவந்தான் பேட்டை 1வது வார்டு பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது இதில் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முள்ளிபள்ளம் கிளைக் கழகம் சார்பில் கட்சி அலுவலகத்தில் கிளை செயலாளர் கேபிள் ராஜா தலைமையில் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

முள்ளி பள்ளம் கிளைக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கருப்பட்டியில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் தலைமையில் கருணாநிதியின் திரு உருவ படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி.இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed