ராமநாதபுரம் மாவட்டம், பட்டினம்காத்தான் ஊராட்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் குப்பைக் கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது , பட்டினம்காத்தான், சக்கரக்கோட்டை , ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் ஈரக் கழிவுகளை உரமாக மாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், கழிவுகளை தரம் பிரித்து சேமிப்பதற்குத் தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்யவும் அறிவுறுத்தினார்.
மேலும் , சிமெண்ட் தளம், மேற்கூரை , தகரத் தடுப்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை சீரமைத்து, பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களை அறிவுறுத்தினார்.
குப்பைக் கிடங்கில் தீப்பற்றும் பகுதிகளுக்கு அருகில் குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பையும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, தீ பரவாமல் தடுக்க நீர் மோட்டார் வசதி மூலம் தண்ணீர் பாய்ச்சி தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
ஆய்வில் , மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் , ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
