சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், சேசன்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், வாழப்பாடி மைய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை சேசன்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் த.தேனருவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர், நமது பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிலம்பம் போட்டி நடத்துவதற்கு அனுமதி அளித்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.


பின்னர், போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மக்கள் அறக்கட்டளை இயக்குநர் ஜெயம் கலந்துகொண்டு போட்டினை பார்வையிட்டார். இந்த போட்டியில் 25 பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பள்ளியின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
சிலம்பம் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

சேலம் செய்தியாளர் / கா.தங்கதுரை 9442979467 / எதிரொலி /
