மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் தினசரி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் குழந்தைகள் வயதானவர்கள் என பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இது குறித்த செய்திகள் கடந்த சில தினங்களாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்த நிலையில் இன்று சோழவந்தான் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கருப்பையா எம்எல்ஏவிடம் இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த மின்சார துறை அதிகாரிகளை அழைத்து அடிக்கடி மின்தடை செய்வதால் அரசின் மீதும் சட்டமன்ற உறுப்பினர் மீதும் தவறான மனநிலை மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் ஆகையால் மின்தடையை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்த நிலையில் அருகில் இருந்த மேலக்கால் தமிழக வெற்றி கழக நிர்வாகி மணியிடம் உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு முறையாக மனு அளிக்குமாறு கூறினார்.

இதனை அடுத்து மேலக்காலை சேர்ந்த மணி மின்சாரத்துறை அதிகாரிகளிடம் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மனு வழங்கினார். இதில் மேலக்கால் கச்சிராயிருப்பு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர்

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed