ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  
    
கூட்டத்தில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 639 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
   
கூட்டத்தில் , வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
    
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்  தெரிவித்ததாவது :
   
ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். 
     
மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
  
அதனைத் தொடர்ந்து , ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.காவனூரை சார்ந்த குவைத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ச.அமுல்  ரூ.10,000/-ம் , ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள 5G மொபைல் சேல்ஸ் அண்டு சர்வீஸ் கடை உரிமையாளர் ஆல்வின் ஜோசப்  ரூ.10,000/-ம் என மொத்தம் ரூ.20,000/-ஐ கன்னிராஜபுரத்தை சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவி செல்வி.சண்முகப்ரியாவின் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், நிதியுதவியை வழங்கினார்கள். 
     
இந்த நிதியுதவி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டுகள் , வாழ்த்துகளை தெரிவித்தார்.

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் , மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி , மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் , மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் லோ.ஜேன் கிறிஸ்டிபாய், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed