கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளிகள், அகல் விளக்குகள் செய்வதில் தனி ஆர்வம் காட்டுவது வழக்கம்…

கார்த்திகை திருநாளினை குறி வைத்து கிருஷ்ணகிரி மட்டுமின்றி குந்தாரப்பள்ளி, கொண்டேப்பள்ளி, வெண்ணம்பள்ளி, கம்மம்பள்ளி, பந்தாரப்பள்ளி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்குகள் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மேலும், இம்மாவட்டத்தில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் சேலம், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத் திருநாளுக்கு இன்னும் ஒரு சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், அகல் விளக்கு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

இது குறித்து, மண்பாண்டத் தொழிலாளி தண்டபாணிஅவர்கள் கூறுகையில் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்படும் அகல் விளக்குகளுக்கு, அதிக மவுசு இருந்து வந்ததால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து, கொள்முதல் செய்தது உண்டு. ஆனால் தற்போது களிமண்ணால் செய்யப்படும் அகல் விளக்குகளுக்கு, மக்கள் மத்தியில் மவுசு குறைந்ததன் காரணமாக, அகல் விளக்குகளின் விற்பனையும் குறைந்து விட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளிகள் அகல் விளக்குகள் செய்து வந்த நிலையில், தற்போது விரல் விட்டு எண்ணும் வகையில் தான் தொழிலாளிகள் அகல் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபடுள்ளனர். மேலும் மூலப்பொருள்களின் விலை ஏற்றம், ஏரிகளில் களிமண் எடுப்பதில் இருக்கும் பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால், மண்பாண்ட தொழில் மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பதாக, மண்பாண்டத் தொழிலாளி வேதனையுடன் குறிப்பிட்டார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed