விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி முத்தாலம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.

இந்த அம்மனை மழைக்கு அதிபதியாக அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர் ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு விழா எடுத்து வழிபடுகின்றனர் விழாவின் இறுதி நாளில் தேரோட்டம் நடைபெறும். பல்வேறு பாரம்பரிய சிறப்புகளை கொண்ட இத்திருவிழா கடந்த வாரம் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

அதிகாலையில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாலை சாற்றி வழிபட்டனர். பின்னர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தேர் ரத வீதிகள் வழியாக வீதி உலா சென்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடு, கோழிகள் பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனர்.

தேர் மதியம் மீண்டும் கோவிலை அடைந்தது. தேரில் இருந்து அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் கோயிலில் ஊஞ்சல் எழுந்தருளலும் பக்தர்களின் நேர்த்திக்கடன் வழிபாடும் நடந்தது. அதனை தொடர்ந்து மாலையில் மஞ்சள் நீராட்டு வைப்பவம் நடந்தது. பக்தர்கள் உருவ பொம்மைகளை அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் இரவு அம்மனை கரைப்பதற்காக ஊர்வலம் ஆக எடுத்துச் சென்றனர். அம்மன் பக்தர்களுக்கு பிரியா விடையளித்து அருள் பாலித்துச் சென்றார். பக்தர்கள் பூக்களை தூவியும் குலவையிட்டும் அம்மனை வழி அனுப்பி வைத்தனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed