மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள குடைவரை சிவன் கோவிலில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் குடில் சுற்றுலா (Camping Site), பறவைகள் கண்காணிப்பு (Bird Watching) உள்ளிட்ட சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
