அதில், எந்த விதத்திலும் சரி செய்ய இயலாத 8 நபர்களுக்கு கண்கள் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி வெடி விபத்து. கண் பார்வையிழப்பு தேவை விழிப்புணர்வு ;
அரவிந்த் கண் மருத்துவமனையின் சார்பில், தீபாவளிக்கு முன்பாகவே பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கு பல விதங்களில் விழிப்புணர்வு விளம்பரங்களும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம். அப்படி இருந்தும் இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு,
இந்த ஆண்டு, அனைத்து அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,464-க்கும் மேல் சென்றுள்ளது. மதுரையில் மட்டும், 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், குழந்தைகளும் பாதிக்கப்பட்டு இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
வெடி விபத்தால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த முறையில் கண் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே, குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வருங்காலங்களில், பெற்றோர்கள் முன்னிலையில் அதிக கவனத்துடன் வெடி வெடித்து பார்வையிழப்பை காக்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.
இனி வரும் காலங்களில், பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி கண்களை பாதுகாப்போம் என உறுதி கொள்வோம். என மதுரை அகர்வால் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில், கண் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் R.உஷா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
