தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் திருஉருவப்படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், நகர் கிராமத்தைச் சேர்ந்த TUJ திருச்சிராப்பள்ளி மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். பாலாஜி அவர்களின் தந்தையார் திரு. R. சேட்டு (மின்சார வாரிய முன்னாள் துணைப் பொறியாளர்) அவர்கள் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவரது நினைவேந்தல் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் , மறைந்த திரு. R. சேட்டு அவர்களின் திருஉருவப்படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன், உலக அமைதி அமைப்பின் நிறுவனர் மற்றும் பிரபல திரைப்பட நடிகை டாக்டர் சோனியா மல்ஹார், சாந்திவனம் இயக்குநர் அரசப்பன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் விஜயகுமார் பழனிச்சாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு, மறைந்தவரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மின்சார வாரியத்தில் துணைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. R. சேட்டு அவர்களின் மறைவு, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தந்தையாரைப் பிரிந்து வாடும் TUJ திருச்சி மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

மறைந்த தந்தையாரின் வாழ்வையும் நினைவுகளையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777
