சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், மானத்தாள் கிராமத்தில் உள்ள உப்பாரப்பட்டியை சேர்ந்த பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது;

சேலம் உப்பாரப்பட்டியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐயனாரப்பன், கருப்புசாமி கோயில் உள்ளது. சமீபத்தில் கோயிலில் பூஜை நடத்துவது தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக கடந்த 2025 ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி ஓமலூர் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் முருகேசன் மற்றும் ரவி ஆகிய இருவரையும் சுழற்சி முறையில் மாதம் ஒருவர் பூஜை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், பூசாரி முருகேசன் பணியில் இருக்கும் போது மட்டும் குலதெய்வங்களை கொச்சைபடுத்தி பேசிவருகிறார். அதேபோல், கோயிலில் அருள்வந்து ஆடும் பெண்களை பெரம்பு குச்சியால் வேண்டுமென்றே அடிக்கிறார். பெண்களுக்கு பேய் ஓட்டி பூஜை செய்வதாகக் கூறி, நடு இரவில் பெண்களை தனியாக கோயிலுக்கு வரச்சொல்கிறார். நேர்த்திக்கடனுக்கு செலுத்தப்பட்ட வேலினை எடுத்து கோயில் அறையின் பூட்டை உடைக்கிறார்.

இதுகுறித்து, போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே முருகேசனை கோயில் பூசாரி பணியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு பெண்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை
9442979467

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed