அரசு அலுவலகங்கள், நிலப் பதிவு மையங்கள், வேலைவாய்ப்பு சார்ந்த இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் என மக்கள் கூடும் பல பொது இடங்களில், பொதுமக்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றபடுவதாக புகார்கள் மூலம் அறியப்படுகிறது. மேலும் அரசு வேலைகள், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற பொய்யான உத்தரவாதங்களை தந்து குறுக்கு வழியில் பெற்றுத் தருவதாகக் கூறிப் பணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது.

மேலும், தங்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி மற்றும் இணைப்பை (Link) அனுப்பி உடனடி அரசு வேலை, நல்ல சம்பளம், வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறி அப்பாவி பொது மக்களிடம் பணத்தைப் பறித்து இடைத் தரகர்கள்ஏமாற்றி வருவதாக என அறியப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் இதுபோன்ற மோசடி செய்யும் இடைத் தரகர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்தவொரு அரசு சேவைக்கும் இடைத் தரகர்களை நாடாமல், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களை நேரடியாக அணுகித் தகவல் பெற்று பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed