சுரக் ஷித் பச்சிபன் அபியன் (பாதுகாப்பான குழந்தை பருவ விழிப்புணர்வு)-மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் -2012,(போக்சோ சட்டம்) குறித்த அகில இந்திய அளவிலான பள்ளி விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்…
………………………..,..
மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாண்பமை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாண்பமை திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படி வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் இன்று (30.10.26) பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் -2012, (போக்சோ சட்டம் )குறித்து மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்,அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசியில் மதியம்:-2.00Pm மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதியுமான
S.சரண்யா, அவர்கள்
தலைமையுரை ஆற்றி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) மற்றும் சட்ட சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் C.விஜயலட்சுமி, அவர்கள்
வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில், K.அன்பரசு, செயலாளர் பார் அசோசியேஷன், வந்தவாசி R.மணி, வழக்கறிஞர், T.சாந்தி, உதவி காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்தவாசி, P.ஹேமலதா, வழக்கறிஞர், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இறுதியில் தS.வெங்கடேசன், முதுநிலை நிர்வாக உதவியாளர், வட்ட சட்டப்பணிகள் குழு வந்தவாசி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
செய்திகள் : நாகை , மணிவண்ணன் / எதிரொலி . இன் / 8939476777

