கிருஷ்ணகிரியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருஉருவப்படத்திற்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.

சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119 வது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட இளைஞர் அணி சதீஷ், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராமு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனி வெங்கடப்பன், நகர செயலாளர்கள் விமல், கேசவன், ஒன்றிய செயலாளர்களான சோக்காடி ராஜன், கன்னியப்பன், கிருஷ்ணன், பையூர் சூர்யா, கிருஷ்ணகிரி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வாசுதேவன், கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் திருமதி சுகந்தி மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே பி முன்னுசாமி கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த விழாவின் போது அதிமுகவை சேர்ந்த ஜெயா, அஜி, சரவணன், வெங்கடாசலம், மாரியப்பன், கோவிந்தராஜ், சேகர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed