திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 30.10.2026 அன்று வெள்ளிக்கிழமை இரவு 11:51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு GSLV-F18/NVS3 ராக்கெட் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் அன்று மாலை 4:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வள துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகின்ற 30.10.2026 அன்று வெள்ளிக்கிழமை இரவு 11:51 மணிக்கு GSLV-F18/NVS3 என்ற ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளதால் இது குறித்து மீன்வளத்துறை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் ஸ்ரீஹரிகோட்டா, சதீஸ்தவான் இராக்கெட் ஏவுதள மையத்திலிருந்து 30.10.2026 (வெள்ளிக் கிழமை) அன்று இரவு 11.51 மணிக்கு GSLV-F18/NVS-03 மிஷன் ஏவுப்பட உள்ளதால், இராக்கெட் ஏவும் காலங்களில் மற்றும் சோதனைக்குட்படுத்தும் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்த்திடும் பொருட்டு குறிப்பிட்ட வரையரைக்குட்பட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிக்குள் மீனவர்கள் யாரும் மீன்பிடி தொழிலுக்குச் செல்ல கூடாது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்கள் எவரும் 30.10.2026 அன்று மாலை 4.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்ற தகவலை தங்கள் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மீனவ கிராம சிக்கி, நிர்வாகிகள் மற்றும் பகுதி தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மீன்வளத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகள் : பழவை முத்து எதிரொலி . இன் / 8939476777
