100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5000 வழங்கவும், கண் பாதிப்பை ஏற்படுத்தும் பயோமெட்ரிக் கருவிழிபடம் கைரேகை முக அங்கீகார பதிவை ரத்து செய்யவும், 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிக்கும் விரிவுபடுத்தவும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. வரதராஜன் தலைமையில் தாலுகா செயலாளர் அமுல்ராஜ், தாலுகா தலைவர் அய்யனார், மாவட்ட குழு பாஸ்கரன் உள்பட பலர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு மற்றும் முன்னாள் எம்பி பொ. லிங்கம், மாநில நிர்வாக குழு வி.ரவி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர். பி. முத்துமாரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பகத்சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பி. கே. விஜயன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

செய்திகள் : ராமகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed